Govt Jobs, JOB NOTIFICATIONS

தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

தமிழக அரசின் சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் பணியிடத்தினை தொகுப்பூதியத்தில் ஓப்பந்த அடிப்படையில் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: சமூகப் பணியாளர் – 01

சம்பளம்: ரூ.14,000 

தகுதி:  உளவியல், சமூகப்பணி, சமூகவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: குழந்தைகள் சார்ந்த பணியில் இரண்டு வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: வேலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளமான www.vellore.nic.in என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தினை பதவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில், வேலூர் – 632001.

APPLICATION FORMDownload Here

You Might Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.